Smart TV (Photo Credit: Pixabay)

ஜூலை 31, சென்னை (Technology News): உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண டிவியை (Normal TV) பழைய மாடலாக இருந்தாலும் கூட, ஒரு ஸ்மார்ட் டிவியாக (Smart TV) மாற்ற பல வழிகள் உள்ளன.

டிவி ஸ்டிக் (TV Stick): சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக்கை (Amazon Fire TV Stick) அல்லது வேறு ஏதேனும் ஒரு ஸ்டிக்கை கூட வாங்கலாம். இல்லையெனில் ஜியோ ஃபைபரின் ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் அல்லது டாடா பிளே பிங்கே பிளஸ் செட்-டாப் பாக்ஸ் போன்ற ஸ்மார்ட் செட்டப் பாக்ஸை பயன்படுத்தலாம். Google Pay History: உங்கள் பணபரிமாற்ற தடயங்களை அழிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

எச்டிஎம்ஐ கேபிள் (HDMI Cable) மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port): அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ,200 க்குள் நல்ல தரமான பல எச்டிஎம்ஐ கேபிள்கள் கிடைக்கின்றன. இப்போது உங்கள் லேப்டாப்பில் எச்டிஎம்ஐ போர்ட் இருந்தால், கூடவே உங்களிடம் எச்டிஎம்ஐ கேபிள் இருந்தால், உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற 20 வினாடிகளுக்கும் குறைவாகவே ஆகும். அதாவது எச்டிஎம்ஐ கேபிளை பயன்படுத்தி உங்கள் லேப்டாப்பை டிவியுடன் இணைக்கவும். பின்னர் டிவியின் ரிமோட்டைப் பயன்படுத்தி இன்புட்ஸ் செக்ஷனில் (Inputs section) பிரிவின் வழியாக எச்டிஎம்ஐ-க்கு மாறவும்.

இப்போது உங்கள் லேப்டாப்பின் ஸ்க்ரீன் ஆனது உங்கள் டிவியில் தோன்றும். இப்போது நீங்கள் எந்தவொரு வீடியோவையும் லேப்டாப் வழியாக ஸ்ட்ரீம் செய்து, அதை உங்கள் வீட்டின் சாதாரணமான டிவி வழியாக பார்த்து மகிழலாம். இப்போது டிவியில் நீங்கள் எதை செய்ய வேண்டுமென்றாலும் கூட அதை லேப்டாப்பின் டச் பேட் வழியாக அல்லது மவுஸ் வழியாக மட்டுமே செய்ய முடியும்.