ஜூன் 06, வாஷிங்டன் (Technology News): அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை தான் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams). இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். அந்த பயணங்களில் இவர் தன்னுடன் பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். இதற்கிடையே 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக இப்போது விண்வெளிக்குச் சென்றுள்ளார். இவருடன் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோரும் பயணம் செய்கிறார். Best VR Headset: அனைவரையும் கவரும் விர்ச்சுவல் ரியாலிட்டி.. எது வாங்கலாம்? விபரம் உள்ளே..!
இவர்கள் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, அட்லஸ் வி ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர். ஆனால், இந்த பயணமானது, பல்வேறு காரணங்களுக்காக மூன்று முறை ஒத்திப்போனது. இருப்பினும் உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
Indian-Origin Sunita Williams to fly to space aboard Boeing-NASA Starliner spacecraft
Video: NASA pic.twitter.com/uJhjtbo3tR
— IANS (@ians_india) June 5, 2024