Windows (Photo Credit: Wikipedia)

ஜூலை 19, புதுடெல்லி (New Delhi): கணினி, மடிக்கணினி போன்ற சாதனங்களில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஓஎஸ் பிரதான இயங்குதளமாக செயல்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி-யில் தொடங்கி தற்போது விண்டோஸ் 11 வது பதிப்பு வரை வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்களுடன் அட்டகாசமாக இயங்கும் விண்டோஸ் 11 இயங்குதளம், பலதரப்பிலும் தொழில்நுட்ப ரீதியாக வரவேற்பை பெற்று இருந்தது.

உலகளவில் செயலிழந்த ஓஎஸ் 11: இந்நிலையில், இன்று திடீரென விண்டோஸ் (Windows OS 11 Crashed) ஓஎஸ் 11 பயன்படுத்துவோரின் இயங்குதளங்களை தாமாக பாதிக்கப்பட்டுள்ளன. நீல நிற திரையுடன், உங்களின் சாதனம் சிக்கலில் சிக்கியதாக கூறி தகவல் பகிரப்பட்டு ஓஎஸ் முடங்கி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பயனர்கள், அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் விண்டோஸ் 11 ஓஎஸ் செயலிழந்ததைக் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்த செயலிழப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப குழு, இந்த பிரச்சனையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. Chandipura Virus: குஜராத்தில் பரவி வரும் சண்டிபுரா வைரஸ்.. அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?!

பாதிக்கப்பட்ட துறைகள்: மைக்ரோசாப்ட் ஓஎஸ் செயல் இழந்ததால் பல்வேறு துறைகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஷேர் மார்க்கெட்டில் பயன்படுத்தப்பட்ட கணினி, மடிக்கணினி போன்ற சாதனங்கள் செயல் இழந்ததால், பலர் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி கண்டனர். மேலும் பல ஐடி அலுவலகங்களில் பணி நடக்க முடியாமல் உள்ளது. விமான நிலையங்கள், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் கணினி இன்றி தத்தளித்து வருகின்றனர்.

சரிசெய்யும் முறைகள்: உங்களுடைய ஸ்கிரீன் ப்ளூவாக மாறினால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. See advanced repair options என்பதனை கிளிக் செய்ய வேண்டும். அப்போது Advanced repair options என்ற மெனு வரும். அதில் Troubleshoot என்பதனை கிளிக் செய்யவும். பின்னர் அட்வான்ஸ் ஆப்ஷன் என்பதனை கிளிக் செய்யவும். அதற்குப் பிறகு ஸ்டார்ட் அப் செட்டிங்ஸ் கொடுத்து ரீஸ்டார்ட் கொடுக்க வேண்டும். உங்களது கணினி அல்லது மடிக்கணினி ரீ ஸ்டார்ட் செய்யப்பட்டவுடன் எஸ்3 பொத்தானை அழுத்தவும். அதில் Command Prompt என்பதனை தேர்வு செய்து cd\windows\system32\drivers என்ற நேவிகேஷன் செல்லவும். பின்பு அதில் உள்ள CrowdStrike Folder என்பதனை ren CrowdStrike CrowdStrike_old என்று மாற்றவும். இதன் மூலம் உங்களது கணினி மீண்டும் சரிவர இயங்க ஆரம்பிக்கும்.