Paytm (Photo Credit: Pixabay)

மே 28, புதுடெல்லி (New Delhi): லட்சக்கணக்கில் பட்டதாரிகள் நாள்தோறும் வேலைத்தேடி அலைகிறார்கள். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் நம் வேலையை தக்கவைப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. அதிலும் இப்போதெல்லாம் ஐ.டி கம்பெனிகளில் திடீரென்று பர்ஃபாமன்ஸ் சரியில்லை என்றெல்லாம் ஆள்குறைப்பு, மூன்லைடினிங் காரணமாக அதிக அளவில் வேலையிழப்பும் நடைபெறுகிறது. அந்த வகையில் பேடிஎம் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. QR Code For Trees: "என்னது மரங்களுக்கு எல்லாம் க்யூஆர் குறியீடா.." சிவகங்கையில் முதன் முறையாக அறிமுகம்..!

பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications) கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வருவாயில் 2.60 சதவீத சரிவை கண்டது. இதனால் நிகர நஷ்டம் 550 கோடி ரூபாயாக அதிகரித்தும், வருவாய் 2,270 கோடியாகவும் குறைந்தது. எனவே 5,000 முதல் 6,300 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பணியாளர்களைக் குறைப்பதன் மூலம் ரூ.400-500 கோடியை மிச்சப்படுத்துகிறது.