செப்டம்பர் 04, புதுடெல்லி (New Delhi): இந்திய அஞ்சல் துறையில் ஆண்குழந்தைகளுக்காக பல நல்ல திட்டங்கள் உள்ளன.
எதிர்காலத்தில் ஆண்குழந்தைகளின் வாழ்க்கைக்கு கைகொடுக்கும் திட்டங்கள்:
தேசிய சேமிப்புச் சான்றிதழ்: இது இந்திய அஞ்சல் துறை வழங்கும் திட்டங்களில் பெரும்பாலானோர் முதலீடு செய்யும் திட்டமாக உள்ளது. இது ஐந்து ஆண்டுகள் லாக் இன் பிரியர்ட் உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பெறப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படும். Free Aadhaar Update: உடனே ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க.. இல்லையெனில் கட்டணம்!!
பொது வருங்கால வைப்பு நிதி: இது ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இந்த கணக்கின் கீழ் முதலீடுகளுக்கு வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இத்திட்டம் 15 ஆண்டுகள் லாக் இன் பீரியர்டைக் கொண்டுள்ளது. 6 ஆண்டுகள் முடிந்த பின், வைப்பு நிதியை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு கணக்கு இருப்பில் 50% வரை அனுமதிக்கப்படுகிறது. இதில் வரிச் சேமிப்பு நன்மைகளை இருக்கிறது.
கிசான் விகாஸ் பத்ரா: இந்தத் திட்டம் முதலீடு செய்யும் திட்டமாகும். இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்குகிறது. இந்தத் திட்டமானது இரண்டரை ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு வரி விலக்கு உண்டு. விருப்பமான் முரைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.