Shaktikanta Das (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 08, புதுடெல்லி (New Delhi): இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 6 ஆம் தேதி துவங்கிய இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் (Monetary Policy) முடிவுகளை தற்போது ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் (RBI Governor Shaktikanta Das) வெளியிட்டு வருகிறார். அதில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே அறிவித்துள்ளார். வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் ஆதரவாக 4 உறுப்பினர்களும், எதிர்த்து 2 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

2023 பிப்ரவரி மாதம் நடந்த நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 6.5% ஆக உயர்த்தப்பட்டதிலிருந்து, 9வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி உள்ளது. இதன் மூலம் அடுத்த 2 மாதமும் இதே வட்டி விகிதங்கள் தொடர உள்ளது. மேலும் இதற்கிடையே, மார்ஜினல் ஸ்டாண்டிங் பேசிலிட்டி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவிகிதமாகவும், ஸ்டாண்டிங் டெபாசிட் பேசிலிட்டி (SDF) விகிதம் 6.25 சதவிகிதமாகவும் மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. Home Insurance Policy: பைக் இன்சூரன்ஸ் தெரியும்.. லைப் இன்சூரன்ஸ் தெரியும்.. ஆனா வீட்டுக்கு இருக்க இன்சூரன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா? விபரம் உள்ளே..!

மேலும், இந்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5% ஆகவும், ஜிடிபி 7.2% ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். ரெப்போ விகிதம் மாற்றாமல் ஆர்பிஐ வட்டி விகிதங்களை வெளியிட்டுள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன் வாங்கியோரின் வட்டி விகிதம் உயராமல் தற்போது இருக்கும் ஈஎம்ஐ தொடரும். மேலும் வைப்பு நிதியின் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது.

ரெப்போ விகிதம்: ரெப்போ விகிதம் (Repo Rate) என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.