RBI (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 07, புதுடெல்லி (Technology News): வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையக் கூடும். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும் என்பது நிம்மதி தரும் செய்தியாக உள்ளது. Best 5g Phone Under 25000: ரூ.25 ஆயிரத்தில் பக்காவான 5ஜி ஸ்மார்ட்போன்கள்... முழு லிஸ்ட் இதோ!

ரெப்போ விகிதம்:

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கும் கடன்களுக்கான வட்டிவிகிதம் தான். தற்போது இந்திய பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தில் உள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாகவும், பணவீக்க விகிதம் 5.2 ஆகவும் இருக்கிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்தால் ரெப்போ விகிதமும் அதிகரிக்கும். ரெப்போ ரேட் அதிகரித்தால் வங்கிகள் கட்டும் வட்டித் தொகையும் அதிகரிக்கும். அது போன்ற நேரங்களில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற மாட்டார்கள் அல்லது இந்த வட்டியை சமாளிக்க மக்களுக்கு தரும் கடனின் வட்டி விகிதத்தை உயர்த்துவர். இதனால் மக்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். மீண்டும் பணவீக்கம் குறைவாக மாறும் போது இந்த ரெப்போ ரேட்டும் குறைந்துவிடும். இதனால் மக்களுக்கு கொடுக்கப்படும் வட்டியும் குறைவாக மாறிவிடும். இந்த ரெப்போ ரேட்களை அதிகரிக்கும் போது, நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன்கள் வாங்காது. இதனால் உற்பத்திக் குறையும் வருமானம் பாதிக்கும். ரெப்போ ரேட்கள் குறைந்தால் நிறுவனங்கள் கடன்கள் அதிகம் வாங்கி உற்பத்தியை அதிகரிக்கும். பங்கு சந்தையில் அந்த நிறுவனங்களின் மதிப்பும் உயரும்.