விலைவாசி உயர்வாலும், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் அதிகரிக்கும் நிதி தேவையினாலும், சேமிப்பு என்பது கட்டாயம் அனைவரும் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. முன்பை விட தற்போது பலரும் சேமிப்பில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் எதில் முதலீடு செய்தால் சரியாக இருக்கும் என தெரிவதில்லை. நம்மால் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃப்ண்ட், தங்கம், ரியல் எஸ்டேட், பிக்ஸட் டெபாசிட் என பல வழிகளில் முதலீடுகளை செய்ய முடியும். அதன் அடிப்படை சாதக பாதகங்களை அறிந்து கொள்வோம்.
எதில் முதலீடு செய்யலாம்?:
பிக்ஸ்ட் டெபாசிட் (Fixed Deposit): நம் நாட்டில் அதிகமானோர் தங்கத்தில் தான் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். அதன் பின் பிக்ஸ்ட் டெபாசிட்களில் முதலீடுகளை செய்கின்றனர். ஏனெனில் இவை இரண்டிலும் ரிஸ்க்குகள் மிகக் குறைவு. தங்கத்தில் முதலீடு செய்தால் சராசரியாக 6% முதல் 8% வரை ஆண்டிற்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இது, பங்குச்சந்தை, மியூச்சல் ஃபண்டை விட மிக குறைவான வருமானமே கிடைக்கும். Power Saving Tips: மின்சார கட்டணம் அதிகம் வருகிறதா? இதைப் பின்பற்றி பில் தொகையை பாதியாக்கலாம்!
மியூச்சுவல் ஃபண்டு (Mutual fund): பங்குசந்தைகள் மற்றும் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால முதலீட்டில் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 12 % வருமானம் கிடைக்கும். ஆனால் இவைகளில் குறுகிய கால முதலீட்டிற்கு ரிஸ்குகள் அதிகமாக உள்ளது. நீண்ட கால முதலீடு செய்வோர் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். ஆலோசகரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் (Real estate): ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்து நிலத்தில் முதலீடு செய்கின்றனர். ரியல் எஸ்டேடுகளிலும் மறைமுகமாக ரிஸ்குகள் அதிகமாகத் தான் உள்ளது. நிலம் வாங்கும் போது இருப்பதை விட விற்கும் போதும் சிக்கல்கள் அதிகம் உண்டாகும். அவசரத் தேவைக்கு, நினைத்த நேரத்தில் நிலத்தை விற்க முடியாது. மேலும் நிலம் வாங்கி பயன்படுத்தாமல் இருப்பதும் பணத்தை வீணாகுவதற்கு சமமே. நிலத்தினால் வாடகை அல்லது ஏதேனும் தொடர் வருமானம் வருவதாக இருந்தால் நிலத்தில் முதலீடு செய்யலாம்.
தற்போது இருக்கும் நவீன காலத்தில், எதிர்காலத்தையும் அவசரகாலத்தையும் காக்க, பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட், ஃபிக்ஸட் டெபாசிட் என அனைத்திலும் தனித்தனியாக பிரித்து முதலீடு செய்ய வேண்டும். மேலும் முதலீடுகளை, இளம் வயதிலேயே தொடங்க வேண்டும். அப்போது தான் நல்ல பலனை எதிர்காலத்தில் அனுபவிக்க முடியும்.