Stock Market (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 05, புதுடெல்லி (New Delhi): இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,287.82 அல்லது 1.56% புள்ளிகள் சரிந்து 79.734.02 ஆக வர்த்தகமாகி வருகிறது. காலை 11:15 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 2.72 சதவீதம் குறைந்து 78,781 ஆகவும், நிஃப்டி 50 2.7 சதவீதம் குறைந்து 24,050 ஆகவும் இருந்தது. அந்த நேரத்தில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 4 சதவீதம் சரிந்தன. வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா, எஸ்பிஐ மற்றும் டைட்டன் போன்ற பங்குகள் அதிக இழப்பு ஏற்படுத்திய பங்குகளாகும்.

காரணம்: அமெரிக்க பொருளாதார நிலையாலும், அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வினாலும் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதற்கு பழிவாங்குவோம் என்று ஈரான் கூறியதையடுத்து போர் பதற்றம் நிலவுவதும், பங்குச்சந்தைக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சேவையின் சோதனை விரைவில் ஆரம்பம்; முழு விபரம் இதோ..!

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 39 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக, ஈரான் நாட்டின் ராணுவ புரட்சிகரப் படைப்பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்தது. தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப் (Hamas Military Leader Muhammad Deif) படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.