அக்டோபர் 03, புதுடெல்லி (New Delhi): இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,264.2 புள்ளிகள் சரிந்து 83,002.09 வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 5345.3 புள்ளிகள் சரிந்து 25,451.60 ஆக இருந்தது. வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், லார்சன் அண்ட் டார்போ, ஆக்ஸிஸ் வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி, கோடாக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி போன்ற பங்குகள் அதிக இழப்பு ஏற்படுத்திய பங்குகளாகும். அதே நேரத்தில் ஜெஎஸ்.டபில்.யு ஸ்டீல், டாடா ஸ்டீல், சன்பார்மா மற்றும் என்டிபிசி பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. Marburg Virus Scare: வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்.. மிரளும் உலக நாடுகள்..!
காரணம்: அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. இஸ்ரேல் (Israel Hamas War) நாட்டின் மீது, பாலஸ்தீனியம் நாட்டைச் சேர்ந்த ஹமாஸ் குழுவினர் தொடங்கிய போர், இன்னும் சில நாட்களில் ஓராண்டை எட்டவுள்ளது. இதனால் இஸ்ரேல் - ஈரான் (Israel Iran War Airstrike) இடையே கடுமையான போர் மூளும் சூழல் உண்டான நிலையில், அக்.01 ஈரான் நாட்டின் இராணுவம், இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் நோக்கி கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், அடுத்த தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது.