National Mango Day (Photo Credit: LatestLY)

ஜூலை 22, சென்னை (Chennai): தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாக மா உள்ளது. இந்த பழத்திற்கு மயங்காதவர்களை இருக்க முடியாது. மாம்பழம் உடல் சூட்டினை கொடுக்கும் என்றாலும் கூட இந்த கோடை காலத்தில் அதனை விரும்பி அனைவரும் சாப்பிடுவோம். அதுவும் பழைய சோறும் மாம்பழமும் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவது யாருக்குத்தான் பிடிக்காது! இதனாலேயே மாம்பழத்தை பழங்களின் அரசன் என்று அழைக்கின்றனர்.

வரலாறு: இந்த மாம்பழங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்டுள்ளதாக வரலாறு (National Mango Day) கூறுகிறது. மேலும் இந்த மாம்பழ விதைகள் மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா முதல் தொடங்கி பின்பு உலகின் பிற பகுதிகளுக்கு சென்று அடைந்துள்ளது. தற்போது உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில் தான் விளைகின்றன. ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் டன் என்ற விகிதத்தில் மாம்பழங்கள் இந்தியாவில் பயிரிடப்படுகின்றன. இந்தியாவிற்கு அடுத்ததாக மாம்பழ விளைச்சலில் சீனா மற்றும் தாய்லாந்து உள்ளது. US President Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ.. அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்..!

வகைகள்: இந்த மாம்பழத்தில் பல வகைகள் உண்டு. 500க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று மாம்பழங்களை அளவுகளும் மாறுபடுகின்றது. சிறிய மாம்பழத்திலிருந்து ஒரு அடிவரை நீளம் வளரக்கூடிய மாம்பழங்கள் வரை இந்த உலகில் உள்ளன. அதிலும் ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ஒவ்வொரு ருசியும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் மியா, சாகி, காசா, அல்போன்சா, செந்தூரம், சப்போட்டா, பங்கனபள்ளி, மல்கோவா என 100க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.

சத்துக்கள்: இந்த மாம்பழங்கள் மிகவும் குறைவான கலோரிகளையே கொண்டுள்ளது. ஆனால் இவற்றில் அளவற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி, புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உடலுக்குத் தேவையான ஆற்றலை தருவதில் சிறந்தது.