TECNO Spark Go 5G (Photo Credit: @techaryan2610 X)

ஆகஸ்ட் 13, சென்னை (Technology News): டெக்னோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி வசதியுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி (TECNO Spark Go 5G Smartphone) என்ற புதிய மாடல், நாளை (ஆகஸ்ட் 14) வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. பட்ஜெட் பிரிவில் உள்ள போன்களில் இது மிகவும் மெலிதான மற்றும் எடை குறைந்த 5ஜி ஸ்மார்ட்போன் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். Oppo K13 Turbo Pro: 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.., புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ அறிமுகம்..!

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி சிறப்பம்சங்கள் (TECNO Spark Go 5G Specifications):

  • டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி, 7.99mm தடிமன் மற்றும் 194 கிராம் எடையுடன் வருகிறது. இது கையில் பிடிப்பதற்கு மிகவும் எளிதாகவும், பிரீமியம் தோற்றத்தையும் கொடுக்கும். இதன் மெட்டாலிக் கோட்டிங் மிடில் ஃபிரேம் மற்றும் பின்பக்க கேமரா வடிவமைப்பு ஆகியவை சிறப்பாக உள்ளன.
  • பேட்டரியை பொறுத்தவரை, 6,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். மேலும், இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
  • இந்த போனில், ஏஐ அசிஸ்டென்ட், கூகுளின் "Circle to Search" மற்றும் AI Writing Assistant போன்ற மேம்பட்ட AI அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மீடியாடெக் டைமென்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் உடன் 4GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கேமரா பொறுத்தவரை, இதில் 50எம்பி மெயின் கேமராவும், 5எம்பி செல்ஃபி கேமராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் டிஸ்ப்ளே 6.74 இன்ச் HD+ LCD திரையாக இருக்கும். மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

    விலை மற்றும் கிடைக்கும் தன்மை:

டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி போனின் விலை ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரும். பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.