மே 10, சென்னை (Technology News): டெக்னோ மொபைல் நிறுவனம் தற்போது, கேமான் 30 சீரிஸை (Camon 30 Series) இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முன்னோட்ட காட்சிகள் மட்டுமே தற்போது வெளிவந்துள்ளன. வெளியீட்டு தேதி விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. College Girl Arson: கல்லூரி மாணவி தீக்குளிப்பு; காதலன் மேல் சந்தேகப்பட்டு விவரீத முடிவு..!

சோனி கேமராக்கள் (SONY Camera): சோனி கேமராக்கள் இந்த ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புகைப்பட ஆர்வலர்களின் கவனத்தை இது நிச்சயமாக ஈர்க்கும். சோனி தனது உயர் ரக இமேஜ் சென்சார்களுக்கு பெயர் போனது ஆகும். சோனி கேமரா மாடல்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், கேமான் 30 ப்ரோ 5G மற்றும் பிரீமியர் 5G போன்றவை ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) கொண்ட சக்தி வாய்ந்த 50MP சோனி IMX890 சென்சாரை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, கேமரா ஷேக் ஆகாமல் கூர்மையான மற்றும் தெளிவான புகைப்படங்களை வழங்கும். மேலும், 50MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 50MP செல்பி கேமராவையும் கொண்டிருக்கலாம்.

மென்மையான செயல்பாட்டை, மீடியாடெக் நிறுவனத்தின் சக்திவாய்ந்த புரொசெசர்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் நாள் முழுவதும் இயங்க வைத்திருக்க போதுமான பேட்டரி திறன் ஆகியவற்றை இதில் எதிர்பார்க்கலாம். அதிகாரப்பூர்வமான முன்னோட்ட காட்சிகள் மூலம், டெக்னோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை கவனம் ஈர்த்துள்ளது.