Pakistan Terror Attack (Photo Credit: @IftiinFm X)

அக்டோபர் 25, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் (Taliban Terrorists) நடத்திய தாக்குதலில் 10 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் (Khyber Pakhtunkhwa) தேரா இஸ்மாயில் கான் நகருக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக நேற்று (அக்டோபர் 24) தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். Uber Camel Ride: பாலைவனத்தில் உபர் ஒட்டக சவாரி.. வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ!

இதில், 10 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக கைபர் பக்துன்வா காவல்துறையும் மாநில முதல்வர் அலி அமின் கந்தாபுரும் இன்று (அக்டோபர் 25) தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், தங்கள் அமைப்பைச் சேர்ந்த உஸ்தாத் குரேஷி கொல்லப்பட்டதற்கு, பழித்தீர்க்கும் நோக்கில் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக அந்த அமைப்பு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. சமீபத்தில், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பஜோர் மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் குரேஷி உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.