Uber Camel Ride: பாலைவனத்தில் உபர் ஒட்டக சவாரி.. வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ!

துபாய் பாலைவனத்தில் உபர் மூலம் ஒட்டக சவாரியை ஆர்டர் செய்து பயணம் செய்ததாக, இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Uber Camel Ride: பாலைவனத்தில் உபர் ஒட்டக சவாரி.. வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ!
Uber Camel Ride (Photo Credit: Instagram)

அக்டோபர் 25, துபாய் (World News): துபாய் பாலைவன பூமி (Dubai desert) என்றாலும் தற்போது சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. துபாய் சென்றால் அனைவரும் ஒட்டக சவாரி சென்று வர ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் துபாயில் பாலைவனத்தில் உபரில் ஆர்டர் செய்து ஒட்டக பயணம் மேற்கொண்டதாக இளம் பெண்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. AI Chatbot: தன் குழந்தையை தற்கொலைக்குத் தூண்டிய ஏஐ.. நீதிமன்ற வாசல் ஏறிய தாய்..!

அந்த வீடியோவில், இரண்டு இளம்பெண்கள் தங்கள் வாகனம் பழுதானதால் பாலைவனத்தில் தவித்துள்ளனர். பின்னர் அதில் ஒரு பெண் உபர் ஆப்பில், ஓட்டக சவாரி தேடி புக் செய்கிறார். அடுத்த சில நிமிடங்களில், ஓட்டகத்தை அழைத்துக்கொண்டு ஒருவர் வந்து, தன்னை உபர் ஒட்டக டிரைவர் என்றும் அறிமுகம் செய்கிறார். இதையடுத்து, அந்த இளம் பெண்கள் உற்சாகமாகி ஒட்டகத்தில் ஏறி அமர்கின்றனர். மேலும் ஓட்டக டிரைவர் தனக்கு இது தான் தொழில், பாலைவனத்தில் சிக்கியவர்களை மீட்கும் உபெர் ஓட்டக டிரைவர் தான் என்று தெரிவிக்கிறார்.

இளம் பெண்ணுக்கு உபரில் கிடைத்த ஒட்டக சவாரி:

(The above story first appeared on LatestLY on Oct 25, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).