
பிப்ரவரி 08, பெஷாவர் (World News): பாகிஸ்தான் நாட்டில், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொலை (Pakistan Terrorist Attack) செய்தனர். வடக்கு வசீரிஸ்தானின் ஹசன் கேல் பகுதியில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 06) நடந்த தாக்குதலின் போது, பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து தாக்கினர். Goma Jailbreak: நூற்றுக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. உலகை உலுக்கிய கொடூரம்.!
தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:
இதில், 12 தீவிரவாதிகளை சுட்டு கொன்றதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.