பிப்ரவரி 07, ருவாண்டா (World News): ருவாண்டா (Rwanda) ஆதரவு M23 கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் ஜனவரி 27 ஆம் தேதி பகல், கோமா நகருக்குள் நுழைந்துள்ள நிலையில், அதன் பின்னர் பல கலவரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். அங்கு நடந்த பயங்கரத்தின் தகவல்கள் கடும் பீதியை ஏற்படுத்துபவையாக உள்ளன. M23 கிளர்ச்சியாளர்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக விசாரணைக்கு என சிறைக்குச் செல்ல முடியவில்லை எனவும் M23 கிளர்ச்சியாளர்கள் கோமாவைக் கைப்பற்றிய பிறகும் சுமார் 2,000 உடல்கள் கோமாவில் அடக்கம் செய்யக் காத்திருப்பதாகவும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். Brazil Heat wave: "வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" - பிரேசிலில் சுட்டெரிக்கும் கடுமையான வெப்பம்..!
பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்:
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கோமா நகரம் தற்போது M23 கிளர்ச்சியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கோமாவின் முன்சென்ஸ் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில் பெண் கைதிகள் பலர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பலர் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். தற்போது தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுவை நோக்கி M23 கிளர்ச்சியாளர்கள் நகர்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.