South Korea Fighter Jet Accidentally Drops Bombs (Photo Credit: @worldinfocuss X)

மார்ச் 07, சியோல் (World News): கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் தலைநகர் சியோலில் (Seoul) இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் போச்சியான் நகர் உள்ளது. இதன் அருகே வடகொரியாவுடனான எல்லை அமைந்துள்ளது. இப்பகுதியினை ராணுவத்தினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இங்கு விமானப்படையின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. Pakistan Bomb Blast: மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம்; 5 பேர் பரிதாப பலி.. பாகிஸ்தானில் பயங்கரம்..!

ராணுவ ஒத்திகை:

இந்நிலையில், தென்கொரியாவில் அடுத்த வாரம் வருடாந்திர ராணுவ ஒத்திகை துவங்கவுள்ளது. இதற்காக தென் கொரியா மற்றும் அமெரிக்க விமானப்படையினர் இணைந்து நேற்று (மார்ச் 06) கே.எப்., 16 ஜெட் விமானத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எம்.கே.82 என்ற 225 கிலோ எடையுடைய குண்டை, தவறான இலக்கில் ஏவினர். அது குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்ததில் வீடுகள், தேவலாயம் ஆகியவை சேதமடைந்தன.

15 பேர் காயம்:

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.