Pakistan Bomb Blast (Photo Credit: @english_ritam X)

மார்ச் 06, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தானில், நேற்று முன்தினம் (மார்ச் 04) ராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு, 'தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான்' என்ற பயங்கரவாதக் குழுவின் துணை அமைப்பான 'ஜெய்ஷ் - அல் - புர்சான்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது. UNICEF's Shocking Revelation on Sudan: ஓராண்டில் சுமார் 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம்.. யுனிசெப் அதிர்ச்சி தகவல்..!

குண்டுவெடிப்பு:

இந்நிலையில், மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு (Bomb Blast) சம்பவம் நடந்துள்ளது. பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் ஐ.இ.டி., வகை குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் கண்டனம்:

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்ப்ராஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பயங்கரவாதம் அனைத்தும் அழிக்கப்படும். அமைதிக்கு விரோதமாக செயல்படுவர்களின் தீய நோக்கங்கள் அனைத்தும் தோல்வியில் முடியும். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.