Nepal Protest (Photo Credit: @ECR_Newswatch X)

செப்டம்பர் 08, காத்மாண்டு (World News): நேபாளத்தில் சமூக வலைதள கணக்குகளுக்கு அந்நாட்டு அரசு சமீபத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில், ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க, அந்நாட்டை சேர்ந்த ஒருவரை நிறுவனம் நியமித்து, அந்த நபர், வாரம் ஒருமுறை நாட்டிற்கு எதிராக சமூக வலைதளத்தில் நடக்கும் விவாதங்களை ஆராய்ந்து தங்களுக்கு வழங்குவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, டிக்டாக், வைபர் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே அரசாங்க விதிப்படி செயல்பட்டனர். இதனை செய்ய தவறிய யூடியூப், டிவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்க்டின் உட்பட 26 நிறுவனங்களின் சேவையை நேற்று (செப்டம்பர் 07) முதல் நேபாள அரசு தடை செய்து உத்தரவிட்டது. ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; 4 பேர் பலி.. 15 பேர் படுகாயம்..!

அரசுக்கு எதிராக போராட்டம்:

இந்நிலையில், நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்கள் மீதான அரசாங்கத் தடைக்கு எதிராக இன்று (செப்டம்பர் 08) காலை 9 மணியளவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இதில், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் போராட்டக்காரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்கள் ஊழலுக்கு எதிராகவும், சமூக ஊடக தளங்கள் மீதான தடைக்கு எதிராகவும் கடுமையாக போராடி வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து, காவல்துறையினரை மீது கல் வீசி தாக்குதல் நடத்தியை அடுத்து, காத்மாண்டுவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: