Jerusalem Shooting Attack (Photo Credit: @NDTVWORLD X)

செப்டம்பர் 08, ஜெருசலேம் (World News): ஜெருசலேமின் வடக்கு பகுதியில், பேருந்து நிறுத்தம் அருகே துப்பாக்கிச் சூடு (Shooting Attack) சம்பவத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். இதில், 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய இரண்டு பேர், பேருந்துக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இதுகுறித்து தகவல் அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். Cancer Vaccination: கேன்சர் மருந்து புதிய சரித்திர சாதனை: ரஷ்யாவின் தடுப்பூசி 100% செயல்படுவதாக அறிவிப்பு.!

துப்பாக்கிச் சூடு சம்பவம்:

இதுகுறித்த விசாரணையில், ஜெருசலேமின் வடக்கு நுழைவாயிலில், யூத குடியிருப்புகளுக்கு செல்லும் பரபரப்பான சாலையில் தாக்குதல் நடந்துள்ளது. தற்போது, எந்தவொரு பாலஸ்தீன குழுவும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இஸ்ரேலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தாக்குதல்கள் நடந்தது. கடைசியாக, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், டெல் அவிவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஹமாஸ் போராளிகள் பகிரங்கமாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.