மே 14, காசா (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தான் தற்போது தஞ்சமடைந்துள்ளனர். GV Prakash Kumar And Saindhavi Announce Divorce: பிரிந்த பிறை தேடும் இரவிலே ஜோடி.. முடிவுக்கு வந்த 11 வருட மண வாழ்க்கை..!

இந்நிலையில் அடுத்த கட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது. அதன் முதற்கட்ட தாக்குதலும் தொடக்கி விட்டது. அதில் ஐநா சபையில் பணிபுரியும் இந்தியர் வைபவ் அனில் காலே (Waibhav Anil Kale) பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் ஏற்பட்டதில் இருந்து அங்குச் சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும்.