Morocco Boat Accident (Photo Credit: @dbsmorocco X)

ஜனவரி 18, இஸ்லாமாபாத் (World News): மேற்கு ஆப்ரிக்க நாடான மவுரித்தேனியா நாட்டில் இருந்து 66 பாகிஸ்தானியர்கள் உட்பட 80 அகதிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று, ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, இந்த படகு மொராக்கோவின் (Morocco) துக்லா துறைமுகம் அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. Former PM Imran Khan: முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நீரில் மூழ்கி பலி:

இந்த விபத்தில் 50 பேர் கடலில் மூழ்கினர். அவர்களில் 46 பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இதில், உயிர் பிழைத்த அகதிகள் மீட்கப்பட்டு தக்லா அருகே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.