RCB vs MI (Photo Credit: @OneCricketApp X)

ஏப்ரல் 11, மும்பை (Sports News): ஐபிஎல் 2024 தொடரில் (IPL 2024) இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டியில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்தது. மேலும், புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. அணியின் பின்னடைவிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக கேப்டன்சியைத் தான் பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடைசியாக டெல்லி அணியுடன் விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றார். The Greatest Of All Time release Date Out: தளபதி விஜய்யின் அசத்தல் என்ட்ரி.. கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

அதேபோல் விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லாத ஆர்சிபி அணியை (Royal Challengers Bengaluru) பொறுத்தவரை 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, ஒரு வெற்றியுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி வான்கடே மைதானத்தில் (Wankhede Stadium) களமிறங்கவுள்ளது. 2020 முதல் மும்பை அணிக்கு எதிராக ஆடிய 7 போட்டிகளில் ஆர்சிபி அணி 5 போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் ஆர்சிபி அணி கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.