செப்டம்பர் 04, நைஜர் (World News): நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு (Boat Capsized) கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் (செப்டம்பர் 02) காலை மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு இரங்கல் தெரிவிக்கப் புறப்பட்ட படகு, போர்கு பகுதியில் உள்ள கௌசாவா அருகில் நீரில் மூழ்கியிருந்த மரத்தின் அடிப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் அதி பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1,400 ஆக அதிகரிப்பு..!
படகு விபத்து:
விபத்து நடந்த சற்று நேரத்திலேயே ஷாகுமி மாவட்டத் தலைவர் சாது இனுவா முஹம்மது, சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். விபத்து குறித்து அவர் கூறுகையில், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நான் சம்பவ இடத்தில் இருந்தேன். படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர் என்று அவர் கூறினார். அளவுக்கு அதிகமான சுமையுடன் படகு, மரத்தின் அடிப்பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.