செப்டம்பர் 02, காபூல் (World News): ஆப்கானிஸ்தானில் நேற்று (செப்டம்பர் 01) காலை கிழக்கு பகுதியில் உள்ள குணார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் 6.0 புள்ளிகளாக பதிவாகிய நிலையில், பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து கடும் சேதம் ஏற்பட்டது. நேற்று 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியானது. இதன் கோர காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், உலக நாடுகள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. Modi-Putin Meeting: ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம்.. கலக்கத்தில் அமெரிக்கா.!
பலி எண்ணிக்கை அதிகரிப்பு:
ஆப்கானிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை பேரிடரை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து பெரும் சேதம் அடைந்துள்ளன. குணார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3,200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில், மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது.