செப்டம்பர் 25, கொழும்பு (World News): மத்திய இலங்கையில் நேற்று (செப்டம்பர் 24) மாலை ஏற்பட்ட கேபிள் கார் விபத்தில் (Sri Lanka Cable Car Accident) மூன்று வெளிநாட்டினர் உட்பட 7 புத்த துறவிகள் உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்படி, 13 புத்த துறவிகள் கொழும்பிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய பௌத்த வழிபாட்டுத் தலமான நா ஓயானா மடாலயத்திற்குப் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, கேபிள் காரில் உள்ள கேபிள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. Super Typhoon Ragasa: ஹாங்காங்கை புரட்டி போட்ட 'ரகாசா சூறாவளி'.. தைவானில் 15 பேர் பலி..!
7 துறவிகள் பலி:
கேபிள் கார் விபத்தில், இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் இந்தியா, ரஷ்யா, ருமேனியா நாட்டை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நா ஓயானா மடாலயம்:
இது தீவின் மிக முக்கியமான பௌத்த மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து துறவிகள் மற்றும் பார்வையாளர்களை அதன் ஆன்மீக மற்றும் தியான பயிற்சிகளுக்காக ஈர்க்கிறது. இலங்கையில் தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் மதத் தலங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளை சென்றடைய கேபிள் கார் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது, கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.