Afghanistan Bus Accident (Photo Credit: @lala515711 X)

ஆகஸ்ட் 20, காபூல் (World News): ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நோக்கி புலம் பெயர்ந்தோரை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்றது. அப்போது, அதி வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே, பேருந்து தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து, லாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்த 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 3 - 7 வயது குழந்தைகளே டார்கெட்.. குழந்தையை பார்த்துக்கொள்வதாக காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர காதலி.!

71 பேர் உடல் கருகி பலி:

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் ஆவார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள மோசமான சாலைகள், வாகன ஓட்டிகளின் முறையற்ற ஒழுங்குமுறைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. இது போன்ற சாலை விபத்துகள் (Accident) அங்கு அடிக்கடி நடக்கின்றன. இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: