Bangladesh Fighter Jet Crash (Photo Credit : @BDcrisis X)

ஜூலை 21, வங்கதேசம் (World News): வங்கதேசம் நாட்டில் உள்ள டாக்கா நகரின் உத்தாரா பகுதியில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் வங்கதேச விமானப்படை சார்பில் போர் விமானம் பயிற்சி மேற்கொண்டு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் பள்ளி கல்வி நிறுவனத்தின் மீது விழுந்து விபத்திற்குள்ளாகியது. வானிலை: பலத்த காற்றுடன் கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு அலர்ட்.! 

பள்ளி வளாகத்தில் விழுந்த போர் விமானம் :

இந்த விபத்தில் சிக்கி பள்ளி வளாகத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் மீது விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதால் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது

விபத்து தொடர்பான வீடியோ :

பலர் காயமடைந்துள்ளதாக தகவல் :