
பிப்ரவரி 26, பாரிஸ் (World News): ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த மருத்துவர் ஜோயல் லீ ஸ்கோரனெக் (வயது 74). கடந்த 2017ஆம் ஆண்டில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுமி, மருத்துவர் ஸ்கோரனெக் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது, 3 லட்சம் ஆபாச புகைப்படங்கள், 650 ஆபாச வீடியோக்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஆகும். அம்மாடியோவ்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்.. ஹைட்ரஜன் பலூனால் வந்த வினை.!
15 ஆண்டுகள் சிறை தண்டனை:
இதனையடுத்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் நான்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (Sexual Assault) வழக்கில் அவருக்கு 2020ஆம் ஆண்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், தற்கொலைக்கு துாண்டப்பட்டனர். மேலும், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகினர். சிலர் திருமண வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர்.
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை:
இந்நிலையில், மேலும் பல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான வழக்குகள் நடந்து வருகின்றன. அதில், ஆஜராவதற்காக அழைத்து வரப்பட்ட அவர், கடந்த 30 ஆண்டுகளாக சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 25) அவர் கூறுகையில், “நான் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளேன். அந்த பாதிப்புகள் இனி சரிசெய்ய முடியாதவை என்பதை நான் அறிவேன். என் செயல்களுக்குப் நானே பொறுப்பேற்கிறேன்” என்றார்.