Vietnam Hydrogen Balloon Explodes (Photo Credit: Instagram)

பிப்ரவரி 22, வியட்நாம் (World News): பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது இன்றளவில் புதுமுகத்தன்மையை அடைந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் எண்ணத்திற்கேற்ப பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் நிலையில், ஒருசில நேரம் அவை விபத்தில் சென்றும் முடிகின்றன. பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத ஒன்று அலங்கார பலூன்கள். விதவிதமான பலூனை வைத்து பிடித்த வகையில் வடிவமைக்கப்பட்டு சிறப்பிக்கப்படும் பிறந்தநாள் அதிக கவனத்தையும் பெற்று வருகிறது. இதனிடையே, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன் வெடித்து பெண்ணின் முகம் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 அன்று எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களை வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நொடி நின்று வந்திருக்காமே? லாரிகடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழப்பு.. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.! 

முகம் கருகிப்போனது:

வியட்நாம் நாட்டில் வசித்து வரும் கியாங் பாம் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண்மணி, உணவகம் ஒன்றில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது, திடீரென பலூன் வெடித்துச் சிதறிய நிலையில், உடனடியாக அங்கிருந்த கழிவறைக்குச் சென்று முகத்தில் நீரை தெளித்து தீயின் வெப்பகாய் குறைத்துள்ளார். இதனால் கியாங்கின் முகம் முழுவதும் சேதமாகி தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், நண்பர்களால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவர் பிறந்தநாள் விழாவுக்காக பயன்படுத்திய பலூனில் ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருந்துள்ளது. இதனால் பலூன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹீலியம் - ஹைட்ரஜன் கவனம் தேவை (Helium Balloons Vs Hydrogen Balloons):

பலூன்களில் பொதுவாக நிரப்பப்படும் ஹீலியம் வாயு நிறமற்றது, மனமற்றது, வெடிக்க வாய்ப்பில்லாதது, எந்த ஒரு சூழலிலும் பலூனில் நிரப்பப்பட்ட பின்னர் வெடிக்காது, சுற்றுசூழலுக்கு பிரச்சனை கொடுக்காது, பாதுகாப்பு மிகுந்தது ஆகும். விலை சற்று அதிகம். ஹீலியம் வாயுவை அதிகம் சுவாசிப்பது உடலுக்கு நல்லது இல்லை. அதேநேரத்தில், ஹைட்ரஜன் வாயு எளிதில் வெடிக்கும் தன்மை கொண்டது, சூடான சூழல் அதனை வெடிக்க வைத்துவிடும். ஹைட்ரஜன் விலை குறைவு ஆகும். இதனால் பலரும் அதனை வாங்கி, ஹீலியம் வாயு என பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டில் கூட சத்தீஸ்கரில் ஹைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட பலூன் வெடித்து 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருந்தனர்.

திடீரென வெடித்து சிதறிய ஹைட்ரஜன் பலூன்கள் (Hydrogen Balloon Explodes):

ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன், விளக்கின் வெளிச்சத்தில் சிக்கி குபீரென தீப்பிடித்த காட்சி: