Corona Virus (Photo Credit: who.int)

மே 20, சிங்கப்பூர் (World News): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (Corona Virus) தொடர்ந்து உலகத்தையே ஆட்டி படைத்தது. உலகமே ஊரடங்கு என்ற பெயரில் அடங்கிப் போனது. கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். பின் கொரோனா பாதிப்பு அனைத்தும் முடிவடைந்து, மக்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக இருந்து வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக (Covid-19 cases) அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தினந்தோறும் சராசரியாக 250 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இதில் சராசரியாக தினமும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பரிவில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gujarat ATS Caught 4 ISIS Terrorists: 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!

எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் அரசு: இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுக்க சிங்கப்பூர் அரசு மக்களுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன் படி கொரோனா பரவலை தடுக்க கூட்ட நெரிசலான இடங்களை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி போடுதல் போன்றவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.