மே 04, நியூயார்க் (World News): பப்புவா நியூ கினியாவில் உள்ள பங்குனா பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. பங்குனாவின் வட மேற்கு திசையில் சுமார் 153 கிலோ மீட்டர் தொலைவில், நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் (Richter Scale) 5.1 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Google Doodle for India's First Women Wrestler: இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை பானு; டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்.!

சுமார் 170 கிலோ மீட்டர் ஆழமான இந்த நிலநடுக்கம், தெற்கு அட்சரேகை 5.64 டிகிரி மற்றும் 154.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கக்கூடும் என முதலில் கணிக்கப்பட்டது. இதனையடுத்து, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தெளிவான தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதன் தாக்கம் அதிகமாக பப்புவா நியூ கினியாவில் ஏற்படும். மேலும், தென்கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் பெருங்கடல் உட்பட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.