பிப்ரவரி 14, ஓரிகான் (Oregon): அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் புபோனிக் பிளேக் என்ற அரிய நோய் (Rare Case Of Bubonic Plague) பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2015ஆம் ஆண்டில் ஒருவர் அங்கு பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் (Black Death) என்றழைக்கப்படும் பிளேக் நோய் பரவியது. மனித வரலாற்றில் மிகக் கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான 5 கோடிக்கும் மேற்பட்டவர்களை இந்த நோய் காவு வாஹ்கியது. Valentine's Day 2024: காதலர் தினம்.. இதன் வரலாறு தெரியுமா.? இன்றைக்கு என்ன நிறம் ஆடை போட போறீங்க..!
அறிகுறிகள்: புபோனிக் பிளேக் என்பது பாலூட்டிகளை பாதிக்கக்கூடிய ஒரு தொற்று நோயாகும், இது யெர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், குமட்டல், பலவீனம், குளிர் மற்றும் தசை வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, புபோனிக் பிளேக்காக இருக்கும் இந்த நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு குணப்படுத்தாவிட்டால், நுரையீரலை பாதிக்கும் நிமோனிக் பிளேக் அல்லது ரத்த ஓட்டத்தில் தொற்றை உண்டாக்கும் செப்டிசிமிக் பிளேக் ஆகியவையை உருவாக்கும்.