9/11 Terror Attack (Photo Credit: @VivekSi85847001 X)

ஜூன் 24, வாஷிங்க்டன் (World News): அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் இரட்டை கோபுரத்தை, கடந்த செப்டம்பர் 11, 2001 அன்று பின்லேடன் தலைமையிலான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழு தாக்கி அழித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில், இரண்டு விமானங்கள் நேரடியாக கோபுரங்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில், வணிக வளாகத்தில் இருந்த 2000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விசயத்திற்கு பழிவாங்க அமெரிக்கா, பின்லேடன் மற்றும் அவனின் தலைமையிலான பயங்கரவாதிகளை உலகளவில் வேட்டையாடி கொன்று குவித்தது.

சவுதிக்கு தொடர்பா?

இரட்டைக்கோபுர தாக்குதல் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதன் தாக்கம் என்பது அமெரிக்காவின் வரலாற்றில் மட்டுமல்லாது, உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் உலகளவில் உள்ள பல்வேறு நாடுகளும், பயங்கரவாத ஒழிப்பு சம்பவத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியது. இந்நிலையில், தற்போது தாக்குதல் சம்பவத்தில் சவுதிக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. PM Modi on 18th Parliament Session: "இந்திய ஜனநாயகத்திற்கே புதிய தொடக்கம்".. அவசரநிலை பிரகடனம் இந்தியாவின் கருப்பு நாள் - பிரதமர் நரேந்திர மோடி..! 

தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை படமெடுத்த சவூதி நாட்டவர்:

அந்த வீடியோவில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்க்டனில் உள்ள வெள்ளை மாளிகை, இரட்டை கோபுரம் உட்பட நகரின் பல பகுதிகளை சவூதி உளவாளி என கூறப்படும் நபர் காட்சிகளாக பதிவு செய்த வீடியோ வெளியாகியுள்ளது. உமர்-அல்-பயாமி என அடையாளம் காணப்படுவார், சவூதி உளவாளி என பெடரல் அதிகாரிகளால் கூறப்படும் நிலையில், 9/11 தாக்குதலுக்கு முன் இவர் சம்பந்தப்பட்ட பகுதிகளை வீடியோ எடுத்த காரணத்தால், சவுதிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுவதாக வீடியோ வைரலானது. ஆனால், இந்த விசயத்திற்கு சவுதி ஏற்கனவே மறுப்பு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசும் எந்த விதமான உரிமை தற்போது கோரலை முன்வைக்கவில்லை.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு?

இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்திய நவாஸ் ஹாஸ்மி மற்றும் காலித் மிஹதர் (Nawaf al-Hazmi and Khalid al-Mihdhar) ஆகியோருடன், சவூதி உளவாளியாக அடையாளம் காணப்பட்டவர் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டாலும், அது தொடர்பான உரிய தகவல்கள் மேற்படி கிடைக்கவில்லை. இதனால் எப்.பி.ஐ மற்றும் அமெரிக்க உளவுத்துறை விசாரணையை முன்னெடுக்க முடியவில்லை. அவர்களின் துப்பறியும் திறன் தோல்வி மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு, பின்னாளில் அவர்களின் துறைகள் கடும் ஒழுங்கபடுத்தலை எதிர்கொண்டன.

செப்டம்பர் 11 அன்று நடந்த தாக்குதல் வீடியோ:

சர்ச்சைக்குரிய வீடியோ: