ஜூலை 24, அபுதாபி (World News): 2025ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி (Abu Dhabi) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக அகமதாபாத் (Ahmedabad) உள்ளது. பாதுகாப்பு குறியீட்டு தரவரிசை, குற்ற அளவுகள் குறித்த பொதுவான கருத்து, பகல் மற்றும் இரவு நேரங்களில் உணரப்படும் பாதுகாப்பு மற்றும் பிற குறிப்பிட்ட குற்றங்கள் குறித்த கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நகரத்தின் பாதுகாப்பு குறியீட்டின் உலகளாவிய பட்டியலில், மொத்தம் 279 நகரங்களுடன் மத்திய கிழக்கு நகரம் முதலிடத்தில் உள்ளது. அபுதாபியின் பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண் ஆண்டின் நடுப்பகுதியில் 88.8 ஆகும். அபுதாபி தொடர்ந்து 9வது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உலகின் 2வது பாதுகாப்பான நாடாகவும் உள்ளது. உள்ளது. இந்தியரின் ஆடையை கிழித்து இனவெறி தாக்குதல்.. அயர்லாந்தில் அதிர்ச்சி.!
2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகின் முதல் 10 பாதுகாப்பான நகரங்கள்:
1. அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பாதுகாப்பு குறியீடு: 88.8)
2. தோஹா, கத்தார் (பாதுகாப்பு குறியீடு: 84.3)
3. துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பாதுகாப்பு குறியீடு: 83.9)
4. ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பாதுகாப்பு குறியீடு: 83.7)
5. தைபே, தைவான் (பாதுகாப்பு குறியீடு: 83.6)
6. மனாமா, பஹ்ரைன் (பாதுகாப்பு குறியீடு: 81.3)
7. மஸ்கட், ஓமன் (பாதுகாப்பு குறியீடு: 81.1)
8. ஹேக் (டென் ஹாக்), நெதர்லாந்து (பாதுகாப்பு குறியீடு: 80.0)
9. ட்ரோன்ஹெய்ம், நார்வே (பாதுகாப்பு குறியீடு: 79.3)
10. ஐன்ட்ஹோவன், நெதர்லாந்து (பாதுகாப்பு குறியீடு: 79.1)
உலகின் பாதுகாப்பு குறியீட்டு பட்டியலில் இடம்பெற்ற இந்திய நகரங்கள்:
1. அகமதாபாத்: 77வது இடம் (பாதுகாப்பு குறியீடு: 68.6)
2. ஜெய்ப்பூர்: தரவரிசை 96 (பாதுகாப்பு குறியீடு: 65.2)
3. கோவை: 112வது இடம் (பாதுகாப்பு குறியீடு: 62.0)
4. சென்னை: 123வது இடம் (பாதுகாப்பு குறியீடு: 60.3)
5. புனே: தரவரிசை 129 (பாதுகாப்பு குறியீடு: 58.7)
6. ஹைதராபாத்: தரவரிசை 139 (பாதுகாப்பு குறியீடு: 57.3)
7. மும்பை: தரவரிசை 145 (பாதுகாப்பு குறியீடு: 55.9)
8. கொல்கத்தா: தரவரிசை 166 (பாதுகாப்பு குறியீடு: 53.3)
9. குருகிராம்: தரவரிசை 209 (பாதுகாப்பு குறியீடு: 46.0)
10. பெங்களூரு: தரவரிசை 211 (பாதுகாப்பு குறியீடு: 45.7)
11. நொய்டா: தரவரிசை 214 (பாதுகாப்பு குறியீடு: 44.9)
12. டெல்லி: தரவரிசை 234 (பாதுகாப்பு குறியீடு: 41.0)