Ireland Indian Man Injured in Suspected Racist Attack (Photo Credit : @IndiaToday X)

ஜூலை 23, அயர்லாந்து (World News): வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது பரவலாக தற்போது அதிகரித்து வருகிறது. இதனிடையே அயர்லாந்தில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக அயர்லாந்து சென்ற இந்தியர் ஒருவர், கடந்த சனிக்கிழமை அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். பெற்றோரின் எதிர்ப்பை மீறிய திருமணத்தால் ஆணவக்கொலை.. காதல் திருமணத்தில் சோகம்.! 

ஆடையை கிழித்து தாக்குதல் :

அவரது ஆடையை கிழித்து ரத்தக்காயம் ஏற்படும்படி தாக்குதல் நடத்திய கும்பல் அவரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளது. மேலும் அந்த நபர் குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. தற்போது இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், இந்தியர் மீது தவறில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை :

மேலும் அவரை தாக்கியவர்களுக்கு வலை வீசியுள்ளனர். தற்போது தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து நேரும்படி உணரும் பட்சத்தில் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பதிவு :