Nepal Interim PM Sushila Karki (Photo Credit: @IndiaToday X)

செப்டம்பர் 26, காத்மாண்டு (World News): நேபாளத்தில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உட்பட 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்கள் மீதான அரசாங்கத் தடைக்கு எதிராக கடந்த செப்டம்பர் 08ஆம் தேதி காலை 9 மணியளவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். அரசின் மீதான ஊழல் குற்றசாட்டுகளை அம்பலப்படுத்தியதால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. Cable Car Accident: கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் பலி.. 4 பேர் படுகாயம்..!

பிரதமர் சுசீலா கார்க்கி:

இந்நிலையில், பிரதமர் கேபி சர்மா ஒலி பதவி விலகியதை அடுத்து, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கி (Nepal Interim PM Sushila Karki) பொறுப்பேற்றார். பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு தனது முதல் தொலைக்காட்சி உரையில், அதிக பிரதிநிதித்துவத்திற்கான இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று, நாடாளுமன்றத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வாக்களிக்கும் வயது குறைப்பு:

சமீபத்திய ஜென் இசட் (GenZ) போராட்டங்களைத் தொடர்ந்து, இளைஞர்களின் அரசியலில் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், குறைந்தபட்ச வாக்களிக்கும் வயது 18இல் இருந்து 16 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தார். இந்த சிக்கலான சூழ்நிலையிலிருந்து வெளியேற, மார்ச் 5ஆம் தேதிக்குள் சுதந்திரமான, நியாயமான மற்றும் அச்சமற்ற சூழலில் தேர்தலை நடத்துவதன் மூலம் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பப் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. 18 வயதை எட்டிய இளைய தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவும், வாக்காளர் பட்டியலை நீட்டிக்கவும் தற்போதுள்ள தேர்தல் சட்டம் திருத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.