செப்டம்பர் 10, காசா (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் () கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர்.
ரஃபா தாக்குதல்: அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் மே 26 ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. Fuel Truck Crash: எரிபொருள் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கி சோகம்; 48 பேர் உடல் கருகி பலி..!
பசியால் இறக்கும் குழந்தைகள்: அதுமட்டுமின்றி ஐ.நா வல்லுநர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலைத் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக உணவுத் திட்டம்: கடந்த மாதத்தில் 16 பள்ளிக் கட்டிடங்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு இன்னும் ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் (WFP-The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளது. அதோடு போர் நிறுத்தமும் தேவைப்படுகிறது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.