ஏப்ரல் 30 , புளோரிடா (World News): அமெரிக்காவில் உள்ள புளோரிடா (Florida, America) மாகாணம், வடக்கு பால்ம் கடற்கரை (North Palm Beach) பகுதியில் நேற்று சூறாவளி (Tornado) கரையை கடந்தது. அப்போது, பயங்கர வேகத்துடன் காற்று வீசி, கனமழையும் பெய்துள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிப்போன நிலையில், தொடர் மழை மற்றும் காற்றால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டன. Google Play Store: ஆன்லைன் லோன் மோசடி தொடர்பான 3,500 செயலிகளுக்கு தடை விதித்தது கூகுள்.. அதிரடி நடவடிக்கை.!
இந்த நிலையில், சாலையில் உருவாகிய திடீர் சூழல் காரை அலேக்காக மேலே தூக்கி பொம்மை போல கீழே தலைகீழாக படுக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.
இவ்விஷயம் தொடர்பான வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அவை சம்பவ இடத்திற்கு பின்னால் பயணம் செய்த காரில் இருந்த டேஷ் கேமில் வீடியோ பதிவாகியுள்ளது.
BREAKING VIDEO 🚨 Vehicle recorded flying in the air in tornado-hit North Palm Beach, Florida
— Insider Paper (@TheInsiderPaper) April 29, 2023