Dimmitt Dairy Farm Explosion (Photo Credit: Twitter / @DDNewslive)

ஏப்ரல் 14, டெக்ஸஸ் (World News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் (Texas, America) மாகாணத்தின் டிம்மிட் (Dimmitt) நகரில் சவுத் போர்க் டைரி பார்ம் (South Fork Dairy Farm) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 18,000-க்கும் அதிகமான பசுக்கள் பண்ணையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பசுக்களிடம் இருந்து பால் உற்பத்தி செய்யப்பட்டு, நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதேபோல, பால் மட்டுமல்லாது பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியும் அங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று அந்த பிரம்மாண்ட பண்ணையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பசுக்கள் பண்ணையிலேயே சிக்கிக்கொண்டுள்ளன.

இதனால் அங்கிருந்த 18 ஆயிரம் பசுக்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. பசு ஒன்றுக்கு 2,000 டாலர் மதிப்பு என்ற வீதத்தில், அந்நிறுவனத்திற்கு தீ விபத்தால் 36 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. Twitter Blue Words: பணம் கொடுத்தவர்களுக்கு சிறப்பு சலுகை.. புளூ டிக் பயனர்களுக்கான அறிவிப்புகள் இதோ.!

பால் பண்ணையில் இருந்து தீ விபத்தை அறிவதற்கு முன்பு குண்டு வெடிப்பு போல பலத்த சத்தம் கேட்டதாகவும் உள்ளூர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றன. மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

உள்ளூர் மக்களின் வீடுகளையும் கரும்புகை சூழ்ந்துள்ள காரணத்தால், அவர்கள் தங்களது வீடுகளை மூடிய நிலையில் வைத்துள்ளனர். மீட்பு பணிகள் துரித கதியில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.