பிப்ரவரி 21, போலந்து: பிராந்திய பாதுகாப்பு கருதி, ஐரோப்பிய யூனியனுடன் (Europe Union Countries) இணைய முயற்சிக்கும் உக்ரைன் (Ukraine) நாட்டின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா (Russia) அந்நாடு மீது போர்தொடுத்து சென்றுள்ளது. ரஷியா - உக்ரைன் (Russia Ukraine War) போர் தொடங்கி ஆண்டுகளை கடந்துவிட்டாலும், உக்ரைன் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத வரையில் தாக்குதல் தொடரும் என ரஷியா அறிவித்துவிட்டது.
இதற்கிடையில், உக்ரைன் நாடு அமெரிக்கா (America) மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் இருந்து நிதி, இராணுவ உதவிகளை பெற்று, ரஷியாவுக்கு எதிரான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உக்ரைன் - அமெரிக்கா இடையே எந்தவொரு வரலாற்றிலும் இல்லாத அளவு நெருங்கிய ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.
போர் நடைபெற்ற கியூவ் (Kyiv) நகரத்திற்கு நேரில் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), நேற்று போலந்து நாட்டில் உள்ள வார்சா (Warsaw, Poland) நகரில் வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு, கெய்வ் (Kyiv) வலுவாக நிற்கிறது. அது பெருமையுடன், உயரமாக, சுதந்திரமாக நிற்கிறது. M Kharge on PM Modi: மக்கள் பாடம் புகட்டுவார்கள் பிரதமர் மோடி – மல்லிகார்ஜுன கார்கே அறைகூவல்..!
நாடுகளின் இறையாண்மைக்காகவும், ஆக்கிரமிப்பு இல்லாமல் வாழும் மக்களின் உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் நாங்கள் நிற்போம், அதற்கு தேவையானதை செய்தோம். இந்த விஷயங்களுக்காக நாங்கள் தொடர்ந்து நிற்போம். உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது.
வானில் இருந்து குண்டுகள் விழ ஆரம்பித்து ஒரு வருடம் கழித்தும், ரஷ்ய டாங்கிகள் உருள ஆரம்பிக்கின்றன. உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவே உள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவின் நாடுகளும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்தவோ அழிக்கவோ முயலவில்லை, புடின் கூறியது போல் மேற்குலகம் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிடவில்லை. அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழ விரும்பும் மில்லியன் கணக்கான ரஷ்ய குடிமக்கள் எதிரிகள் அல்ல" என பேசினார்.