Russia Plane Crash (Photo Credit: @MarioNawfal X)

ஜூலை 24, மாஸ்கோ (World News): ரஷ்யாவின் துார கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள அமுர் மாகாணத்தில் உள்ள டின்டா நகரத்தை நோக்கி, சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏஎன் 24 ரக பயணிகள் விமானம் (Plane Crash) சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 40 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். Safest Cities in The World 2025: உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி முதலிடம்.. இந்தியாவில் 12 நகரங்கள்..!

ரஷ்ய விமானம் விபத்து:

டின்டா விமான நிலையம் அருகே சென்றபோது, விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதா என்ற சந்தேகத்தில் மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கிழக்கு அமுர் பகுதியில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

வீடியோ இதோ: