Apple iPhone 16 Series (Photo Credit: @yours_truly0456 X)

அக்டோபர் 28, இந்தோனேசியா (Technology News): இந்தோனேசியாவில் (Indonesia) ஆப்பிள் ஐபோன் 16 (iPhone 16) மாடலை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளை, ஐபோன் 16 சீரிஸை வாங்குவதற்கு எதிராகவும், இந்தோனேஷியாவின் தொழில்துறை அமைச்சர் ஆன அகஸ் குமிவாங் கர்தசஸ்மிதா (Agus Gumiwang Kartasasmita), ஐபோன் 16 போனை பயன்படுத்துவது சட்டவிரோதமாக கருதப்படும் என்று அறிவித்துள்ளார். Money Management Tips: மாத கடைசிலயும் உங்க கையில் பணம் இருக்க வேண்டுமா? உங்களுக்கான பண மேலாண்மை டிப்ஸ்.. இதோ!

ஆப்பிள் ஐபோன் 16 மாடலுக்கு, இந்தோனேஷியா நாட்டில் இயங்க தேவையான இன்டர்நேஷனல் மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி (IMEI) சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் இந்தோனேஷியாவின் தொழில்துறை அமைச்சர் (Industry Minister) விளக்கமளித்து உள்ளார். ஆப்பிள் நிறுவனமானது இந்தோனேஷியாவில் 1.71 டிரில்லியன் ரூபாய் ($109 மில்லியன்) முதலீட்டை செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், 1.48 டிரில்லியன் ரூபாயை ($95 மில்லியன்) மட்டுமே முதலீடு செய்துள்ளது. இதனால், 230 பில்லியன் ரூபாய் ($14.75 மில்லியன்) இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடலை விற்பனை செய்வதற்கான தேவையான அனுமதிகளை தொழில்துறை அமைச்சகம் வழங்கவில்லை என்றும் அமைச்சர் கர்தாசஸ்மிதா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் பழைய தயாரிப்புகள் இந்தோனேசியாவில் இன்னும் விற்பனை செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.