அக்டோபர் 28, டெல்லி (Finance Tips): பண மேலாண்மை (Money Management) என்பது ஒவ்வருவரும் தனித்தனியாக கற்றுக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பாடமாகும். பணம் சமாதிக்கும் பலரும் அவர்களின் நிதி நிலையை விட்டு அடுத்த நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு காரணம் நிதியை சரியாக கையாள தெரியாமல் இருப்பது தான். நிதி மேலாண்மை இளம் வயதிலேயே சரியாக செய்ய வேண்டும். இது எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும். இந்த நிதி மேலாண்மை பற்றிய சில வழிமுறைகளைப் பற்றி காணலாம்.
அவசியமான பட்ஜெட் பழக்கம்:
நிதி எதுவாயினும் அனைவரும் கூறுவது பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்துவது தான். சரியான முறையில் வரவு, செலவு, சேமிப்பு, முதலீடு, கடன் என அனைத்தியும் உள்ளடக்கி பட்ஜெட் போட வேண்டும். வரவில், வருமானம், போனஸ், கமிஷன், பார்ட் டைம் வருமானம் என அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.செலவில் வாடகை, மளிகை,போக்குவரத்து, பொழுது போக்கு, பிற செலவுகள் என அனைத்தும் சேர்க்க வேண்டும். மேலும் முதலீடுகள், சேமிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்திற்கான நிதியாகும். பட்ஜெட் போட்டு அப்படியே விட்டு விட கூடாது, எதில் செலவு அதிகமாகிறது. அணாவசிய செலவா, எதில் செலவுகளை குறைக்க வேண்டும் என கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேமிப்பு:
சேமிப்பு எதிர்காலத்தில் பயன்பாட்டிற்காக பணத்தை ஒதுக்கி சேமிப்பதாகும். இது ஒரு இலக்கிற்காகவோ அல்லது பிர்கால நிதி தேவைக்காக சேமிப்பதாகும். இது குறுகிய காலத்தில் ஒரு நிதி இலக்கை அடைய உதவும். கார், திருமணத்திற்காக, கடன் அடைக்க நிதியை சேமிப்பதாகும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என இலக்கு வைத்து சேமிக்க வேண்டும். தொடர்ச்சியான சேமிப்பு உங்களை இலக்குகளை விரைவாக அடைக்க உதவும். சேமிக்கும் பழக்கம் செலவுகளை கட்டுப்படுத்தும். மேலும் நிதி ஒழுங்குமுறையைக் கற்றுக் கொடுக்கும். Fixed and Variable Rate Loans: நிலையான vs மாறுபடும் வட்டி.. வீட்டு கடன் வாங்க சிறந்தது எது?
முதலீடு:
வருமானத்தை இரப்பாக்குவது நிதி மேலாண்மையில் அனைவரும் பின்பற்ற வேண்டும். ஒரு சிலர் மட்டுமே முதலிடுகிறார்கள். முதலிடும் பெரும்பான்மையானவர்களும் முதலீடு செய்வது நிலத்திலும், நகைகளிலுமே. இவைகள் நம்பிக்கையான ரிஸ்க் இல்லாத முதலீடு என அனைவரும் கருதுகின்றனர். பங்கு சந்தையிலும், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் கூட முதலீடு செய்யாலாம் ஆனால் இதில் ரிக்ஸ் இருப்பதால் முதலீடு செய்ய மறுக்கின்றனர். ஆனால் நீண்ட கால முதலீட்டிற்கு இது சிறந்த வழியாக உள்ளது. இதில் நீண்ட கால் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். முறையாக தனித்தனி இலக்கிற்காக முதலீடு செய்ய வேண்டும். குழந்தைகளின் திருமணம், படிப்பு, மற்றும் எதிர்கால மருத்துவ செலவு அனைத்தையும் கருத்தில் கொண்டு முதலிட வேண்டும்.
கடன் மேலாண்மை:
சேமிப்பு முதலிடு இல்லாமல் இருந்தால் நிதிநிலையில் அடுத்த நிலைக்கு செல்ல முடியது. அதே நிதிநிலையில் தான் இருக்க வேண்டும். ஆனால் ஒருவருக்கு கடன் மேலாண்மை இல்லை எனில் நிதிநிலையில் கீழே சென்று கொண்டே இருக்கும் நிலை ஏற்படும். அதிலிருந்து வெளிவருவது கடினமான காரியமாகிவிடும். கடன்களை குறித்த தேதிக்கு முன்பே அடைக்க வேண்டும். கடன்களை வாங்கி கொண்டே இருக்க கூடாது. கடன்களை அடைக்க வேண்டும் என்பதே முதன்மையானதாக இருக்க வேண்டும். அவசர நிதித்தேவையாக இருந்தாலும் கடன் நிறுவனங்களின் வட்டி விகிதங்களை கருத்தில் கொள்வது அவசியம்.
கடன்களின், வீடு வாங்க அல்லது பொருட்கள் வாங்க, இஎம்ஐகள், நகை கடன்கள், லொன்கள் போன்றவைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடைக்க வேண்டும். தற்போது கடன்களில் பலரும் கவனிக்காமல் இருப்பது கிரெடிட் கார்டு கடன்கள் தான். கிரெடிட் கார்டுகளி சரியாக கையாளாவிடில் காலம் முழுவதும் நீங்கள் கடனாளியாக இருக்க வேண்டிய வரும். மேலும் இது கிரெடிட் ஸ்கோரை பாதித்து லோன் வழங்காமல் கிடைக்காமல் போகும்.
பொருளாதார மேம்பாடு:
நிதி மேலாண்மையில் முக்கியம் உங்கள் பொருளாதார நிலை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான செயல்பாடும் தான். மேற்கூறிய அனைத்தும் ஒரு ஒழுக்கமான நிதிமுறையைப் பின்பற்றுவதாகும். இவைகளை முறையாக பின்பற்றினாலே நிதிநிலை தானாக மேம்படும். இருப்பினும் தங்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுக்க வேண்டும். நிலம் வாங்குவது வீடு கட்டுவது, வாகனம் சேமிப்பு, எதிர்கால செமிப்பு, மற்றும் சுய தொழில்கள் என அனைத்தையும் முன்பே திட்டமிட வேண்டும். மேலும் அவ்வப்போது உங்கள் உங்கள் திட்டங்கள் சரியான முறையில் செல்கிறத என்று கண்காணிக்க வேண்டும். இதற்கு நிதி ஆலோசகர் தேவைப்பட்டாலும் அதற்காக செலவு செய்யலாம்.