Iran Strikes Israel (Photo Credit: Instagram)

ஜூன் 14, டெல் அவிவ் (World News Tamil Today): இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்.7, 2023ல் பாலஸ்தீனியம் (Israel Palestine War) நாட்டின் ஹமாஸ் அமைப்பு (Hamas Terrorist) போர்தொடுத்துச் சென்றது. போரின் தொடக்கத்தில் இஸ்ரேலியர்கள் 1400 பேர் கொடூரமான வகையில் கொலை செய்யப்பட்டனர். பலநூறு இஸ்ரேலியர்கள் பிணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. போரின் தொடக்கத்தில் மிகப்பெரிய முடிவை எடுத்த இஸ்ரேல், இன்று வரை 2 ஆண்டுகளை கடந்தும் பாலஸ்தீனியத்தின் மீது தாக்குதலை தொடருகிறது. ஹமாஸ் பயங்கரவாத குழுவுக்கு ஈரான் உட்பட மத்திய கிழக்கில் உள்ள சில இஸ்லாமிய நாடுகள் நேரடியாக உதவி செய்தன. இதனால் அந்த நாடுகளின் மீதும் இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. போரில் காசாவில் உள்ள 55,000 மக்கள் கொல்லப்பட்டனர். போரின் தன்மை மடைமாறிச்செல்வதாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் இஸ்ரேலை எச்சரித்தாலும், ஹமாஸை ஒழிக்கும் வரை எங்களின் தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது. Ahmedabad Plane Crash: விழுந்து நொறுங்கிய விமானத்தில் முன்னாள் முதல்வர்? பரிதவிப்பில் குடும்பத்தினர்.! 

இஸ்ரேல் - ஈரான் போர் (Israel Iran War):

உலக நாடுகளின் கண்டனத்தை மீறியும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுமட்டுமல்லாது, ஹமாஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக ஈரான், லெபனான் நாட்டிலும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஈரான் நாடு அணு ஆயுதம் தங்களிடம் இருப்பதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து, அச்சுறுத்தலை வெளிபடுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று (ஜூன் 13) இஸ்ரேல் இராணுவம் ஈரானின் (Israel Strikes Iran) 8 நகரங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் ஈரானின் முப்படை தளபதி உட்பட பலரும் இறந்தனர். ஈரானில் உள்ள அணு ஆயுத மையம், அதனை உற்பத்தி செய்யும் இடங்கள், அணு ஆயுத பணியில் ஈடுபட்டு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் தன்னிச்சையாக நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்காது. இந்த தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரானின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஈரான் தாக்குதலை (Iran Strikes Israel) நேற்று இரவில் முன்னெடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற சூழல் மேலும் அதிகரித்துள்ளது. முப்படை தளபதி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க பதில் தாக்குதல் நடக்கிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறு ஏற்கனவே இந்திய அரசு சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு செல்வதை தற்காலிகமாக தள்ளிவைக்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் இஸ்ரேல் மீது நடத்திய ஈரானின் தாக்குதலை ஆதரித்து ட்விட் பதிவு: