Bangladesh Riots (Photo Credit: @Ani_Digital X)

ஆகஸ்ட் 19, டாக்கா (World News): வங்க தேசத்தில் சுதந்திரப் போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. 30% ஆக இருந்த இருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக குறைக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் போராட்டம் ஆனது கைவிடப்பட்டது. இருப்பினும் போராட்டத்தில் (Bangladesh Protest) பங்கேற்றவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

வங்கதேச வன்முறை: இதை அடுத்து வங்கதேச பிரதமர் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்ட வன்முறையில் சிக்கி 14 காவலர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கலவரங்களுக்கு மத்தியில், ‘வங்கத் தந்தை’ என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (ஷேக் ஹசீனா தந்தை) சிலையை கலவரக்காரர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்நாட்டில் அனைத்து இணைய சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டன. Air India Crew Member: ஏர் இந்திய விமான பணிப்பெண் பலாத்கார முயற்சி; ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

பிரதமர் ராஜினாமா: நிலைமை கையை மீறிச் சென்ற நிலையில், அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா (Prime Minister Sheikh Hasina) தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். வங்கதேசத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் ஹசீனா வென்றதாக அறிவிக்கப்பட்ட போது, தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று உலக நாடுகள் கூட குற்றஞ்சாட்டின. மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கடந்த 8ம் தேதி இரவு பதவியேற்றார்.

பள்ளிகள் திறப்பு: தொடர்ச்சியான மாணவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி அனைத்து கல்வி நிலையங்களும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு மாதத்துக்கு பிறகு கல்வி நிலையம் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேலைநாள்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.