ஆகஸ்ட் 18, லண்டன் (World News): சர்வதேச அளவில் விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்திய நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான விமான பணிப்பெண்கள், விமானிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களின் இலக்குகளை சென்றடைந்ததும், அங்கு தற்காலிகமாக நிறுவனம் சார்பில் வழங்கப்படும் அறைகளில் ஓய்வெடுத்து, பின் மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஏர் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இங்கிலாந்து (England) நாட்டில் உள்ள லண்டன் (London), ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அதில் இடம்பெற்று இருந்த பணியாளர்களுக்கு, ரெடிஷன் ரெட் (Radisson Red Hotel) ஹோட்டலில் தங்க அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 01:30 மணியளவில் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், பணிப்பெண் ஒருவர் தங்கியிருந்த அறைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த நிலையில், அவரிடம் இருந்து பலத்த போராட்டத்திற்கு பின் மீண்ட பெண்மணி, பக்கத்து அறையில் இருந்த குழுவினரை உதவிக்கு அழைத்துள்ளார். UFO Sightings: அச்சச்சோ.. ஏலியன் வந்திருச்சு.. உள்ளூர் மக்கள் பகீர் குற்றசாட்டு.. அதிர்ச்சி தகவல்.!
குறுஞ்செய்தி கசிந்தால் உலகுக்கு அம்பலமான அதிர்ச்சி தகவல்:
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து வந்தவர்கள், மர்ம நபரை பிடித்துக்கொண்டனர். மேலும், ஹோட்டல் நிர்வாகத்தின் மூலமாக காவல்துறையினருக்கும் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மர்ம நபரை கைது செய்தனர். பெண் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பான விவகாரம் இணையதளங்களில் கசிந்த நிலையில், ஏர் இந்திய நிறுவனம் தனது வெளிப்படையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் துணை நிற்பதாக கூறியுள்ள நிர்வாகம், அவர் தற்போது மும்பை அழைத்து வரப்பட்டுள்ளார். எங்களின் தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் தேசிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பல்வேறு சர்ச்சை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, விமான பணிப்பெண்ணுக்கு இலண்டனில் வைத்து பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
SHOCKING!!
Air India hostess attacked by Intruder in London!!
Air india employees have been raising alarms about their accommodation in London lately. Management however was reluctant in changing their accommodation!!
Says - Intruder followed till the room, knocked on pic.twitter.com/XSqN8lVtyP
— Hirav (@hiravaero) August 17, 2024