Taga Masayuki | Central Minister Piyush Goyal | Global Investors Meet 2024 Chennai (Photo Credit: @ANI X)

ஜனவரி 07, சென்னை (Chennai): தலைநகர் சென்னையில், மூன்றாவது முறையாக தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (Global Investors Meet Chennai) இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 7) மற்றும் நாளை (ஜனவரி 8) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டில் மாணவர்கள் மற்றும் தொழில் துறையின் அனைத்து தரப்பினர் பங்கு பெறச் செய்வதன் வாயிலாக, பல முதலீடுகளை ஈர்க்கவும், மாணவர்கள் எதிர்கால நிறுவனங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய முதலீடுகள் ஈர்ப்பு: இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய முக்கிய நிறுவனங்களும் கலந்துகொண்டுள்ளன. மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பாக மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கான முன்பதிவுகளையும் செய்துள்ளனர். 2024ம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 5.50 இலட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்காக மாநாடு நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. Dhoni Smoke Hookah?: பார்ட்டியில் ஹுக்கா புகைத்த தல தோனி?: வீடியோ லீக்கானதால் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.! 

சென்னையின் ஜப்பான் தூதரக அதிகாரி பேச்சு: மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானிய தூதரக அதிகாரி டாகா மசாயுகி (Taga Masayuki, Consul-General of Japan), "இந்தியாவின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஜப்பான் மிகமுக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ உட்பட பிற திட்டங்களுக்கு நாங்கள் எங்களின் ஆதரவை வழங்குகிறோம். இதனால் எங்களின் ஒத்துழைப்பு என்பது மேலும் வலுப்பெறும்" என தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உரை: அதனைத்தொடர்ந்து, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் (Union Minister Piyush Goyal), "தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் கோவில்கள், காஞ்சிபுரம் புடவைகள் தயாரிப்பு என அழகான தயாரிப்புகளை வழங்கும் மாநிலம் ஆகும். 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க, தமிழ்நாடு பங்கெடுத்திருக்கும் முயற்சியால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆதித்யா எல்1 திட்டத்தின் வெற்றி நமக்கு தெரியும். அத்திட்டத்தின் திட்ட இயக்குனர், தமிழ்நாட்டின் செல்வமகள் நிகர் ஷாஜி என்பதை பெருமிதமாக சொல்வோம். விண்வெளி திட்டத்தினால் இந்தியாவின் முன்னேற்றம் அதிகரித்துள்ளது" என கூறினார்.