ஜனவரி 11, அமெரிக்கா (America): உலகின் முன்னணி சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா விளங்குகிறது. இந்த மெட்டா நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) உள்ளார். இப்போது இவரது ஆர்வம் மாடுகளை வளர்ப்பது பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் தற்போது மாடு வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளார். Cleaning Tips For Kitchen: எவ்வளவு சுத்தம் பண்ணியும் சமையலறை அழுக்கா இருக்கா? கவலைப்படாதீங்க... தயிர் யூஸ் பண்ணுங்க..!
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே என் இலக்கு. அதற்காக நான் மாடுகளுக்கு மக்காடமியா கொட்டைகள் மற்றும் பீர் போன்றவைகளை உணவாக கொடுக்கிறேன். இதன் மூலம், தரமான இறைச்சியை தயாரிக்கலாம். பீர் (Beer) மற்றும் மக்காடமியா (Macadamia) கொட்டைகளும் இந்த பண்ணையில் தான் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு சீசனிலும் மாடுகளை வளர்ப்பதை நாங்கள் மேம்படுத்துவோம். இதன் மூலம் உலகின் மிகச் சிறந்த மாட்டுக்கறியை நாங்கள் உற்பத்தி செய்வோம்" என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram